Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீர்மானத்தை எட்டமுடியாத நிலையை அடைகின்றதா அமெரிக்கா?

In
Updated: 07:34 GMT, Apr 27, 2017 | Published: 07:25 GMT, Apr 27, 2017 |
0 Comments
2190
icon_com
This post was written by : Anojkiyan
donald-trump-big-government-advocate-b2

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மெக்ஸிக்கோ சுவர் தொடர்பான நிலைப்பாட்டில் தற்போது ஆளும் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடு காணப்படுவதால், தீர்க்கமான முடிவை எட்டமுடியாத நிலையை அமெரிக்க அரசு அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை அமெரிக்க அரசாங்கம், தீர்மானங்களை எட்ட முடியாத நிலையை அடைந்தது போல தற்போதும் அதே நிலையை அடையும் என பொருளியல் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் மதில்சுவர் கட்டுவது தொடர்பான ட்ரம்பின் தேர்தல் கால வாக்குறுதி தற்போது மங்கி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த வார இறுதியில் ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்த கருத்து அமைந்திருந்ததாக அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

“மிகவும் அவசரமாக தேவைப்படும் மதில்சுவருக்கு, எதேனும் ஒரு வகையில் பின்னாளில் இறுதியாக மெக்ஸிகோ பணம் செலுத்தும்” என ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார்.

குறித்த மதில்சுவருக்கு மெக்ஸிகோவிடமிருந்தே நிதி பெறப்படும் என்ற கருத்தையும் மெக்ஸிக்கோ மறுக்க, தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் ட்ரம்ப் உறுதியாகவுள்ளார். ஆனால், அவரின் இந்த சர்ச்சையான முடிவுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தற்போது, அவரது இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் குறுகிய காலச் செலவீனத்துக்கான கருத்தொற்றுமையை ஏற்படுத்தப்பட ட்ரம்ப் தலைமையிலான அரசு முயல்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg