Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ப்ளே ஒஃப் சுற்றுக்கான தகுதி போட்டியில் மோதுகின்றன பெங்களூர் – குஜராத் அணிகள்

In விளையாட்டு
Updated: 10:06 GMT, Apr 27, 2017 | Published: 07:37 GMT, Apr 27, 2017 |
0 Comments
1572
This post was written by : Surenth
Gujarat Vs Bangalure

10ஆவது ஐ.பி.எல். தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும் சுரேஸ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி பதிவு செய்து 5 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதுடன் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மாத்திரம் ப்ளே ஒஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குஜராத் லயன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடனும் 5 தோல்விகளுடனும் 4 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

எனவே, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே ப்ளே ஒஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி களமிறங்க உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg