Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காஷ்மீர் வன்முறை: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிப்பு

In இந்தியா
Updated: 08:00 GMT, Apr 27, 2017 | Published: 07:47 GMT, Apr 27, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Shailu
Social Media

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதன்படி பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது, ஒரு மாதம் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமுலில் இருக்கும் என்று அம்மாநில உட்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே.கோயல் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய டெலிகிராப் சட்டத்தின் 1885இன் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் நலனை கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அன்மையில் புல்வாமா மாவட்டத்தில் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்  20இற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததோடு, கல்லூரிகளுக்கும் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg