Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் கொரியாவில் நிறுவப்படவுள்ள ஏவுகணைத் தடுப்பு அமைப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு

In
Updated: 08:24 GMT, Apr 27, 2017 | Published: 08:11 GMT, Apr 27, 2017 |
0 Comments
1233
This post was written by : Anojkiyan

தென் கொரியாவின் தென்பகுதியில் நிறுவப்படவுள்ள அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கைக்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சி, இந்நடவடிக்கையினை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“அமெரிக்கா தற்போது தென் கொரியாவில் செயற்படும் விதமானது, இப் பகுதியை போரில் தள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கா, கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து தேவையற்ற விடயங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், வட கொரியாவும் அணு ஆயுத மேம்பாடு போன்ற விடயங்களை கைவிட்டு அமைதியை ஏற்படுத்த உதவ வேண்டும்” என கூறினார்

நேற்று (புதன்கிழமை) காலை, இராணுவ பாதுகாப்பு சாதனங்களை ஏற்றிய அமெரிக்காவின் நீண்ட இராணுவ ட்ரக்டர்கள், தென் கொரிய தலைநகரில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில், பயன்படுத்தப்படாத கோல்ஃப் மைதானத்துக்கு சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg