Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா காலமானார்

In இந்தியா
Updated: 09:32 GMT, Apr 27, 2017 | Published: 08:01 GMT, Apr 27, 2017 |
0 Comments
1323
This post was written by : Shailu

பொலிவூட்டில் நூற்றிற்கும் அதிகமான படங்களில் நடித்து, இலட்சக்கணக்கான இரசிகர்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும்  நடிகரான வினோத் கண்ணா தன்னுடைய 70வது வயதில் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) காலமானார்.

கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குர்பானி, தயவான், மேரே அப்னே உள்ளிட்ட 100-இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், இறுதியாக 2015இல் ஷாருக்கான் நடித்த ‘தில்வாலே’ படத்தில் நடித்ததோடு திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த வினோத் கண்ணா, கடந்த 1998ஆம் ஆண்டு குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg