Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்ப்பமாக இருந்த போதே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றேன்: செரீனா வில்லியம்ஸ்

In டெனிஸ்
Updated: 10:12 GMT, Apr 27, 2017 | Published: 08:53 GMT, Apr 27, 2017 |
0 Comments
1267
This post was written by : Surenth
Serena-Williams-Husband

கர்ப்பமாக இருந்த போதே தான் அவுஸ்ரேலிய ஓபன் தொடரில் விளையாடி 23ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெற்றி பெற்றதாக செரீனா வில்லியம்ஸ் பெருமையாக கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ் விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“கடந்த ஜனவரி மாதம் அவுஸ்ரேலிய ஓபன் தொடருக்கு 2 நாட்களுக்கு முன்புதான் நான் கர்ப்பமாக இருப்பது  தெரியவந்தது. அந்த போட்டியில் எனது 23ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றேன்.

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சோர்வு அடைவதுடன், அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் சொல்வதை கேட்டு இருக்கின்றேன். ஆனால் நான் எந்தவித சோர்வும் இன்றி நல்ல நிலையில் உள்ளேன்.

நான் விளையாடிய எல்லா போட்டிகளையும் போலவே அவுஸ்ரேலிய ஓபன் தொடரையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் நான் செயற்பட்டேன். நான் வெல்லாவிட்டால்தான் அது பெரிய செய்தியாக அமையும்.

இந்த வருடம் மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டேன். ஆனால் குழந்தை பெற்ற பிறகு நிச்சயம் மீண்டும் விளையாட ஆரம்பிப்பேன். ஆனால் எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தொடர்ந்தும் என்னால் மீண்டும் விளையாட முடியும். 36 வயதாகியும் எனது அக்கா வீனஸ் இன்னும் விளையாடி வருகின்றமை எனக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.

தாயாக இருப்பது எனது வாழ்க்கையில் புதிய அங்கமாகும். வருங்காலத்தில் எனது பிள்ளை பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்து என்னுடைய விளையாட்டுக்கு உற்சாகம் அளிப்பார் என்று நம்புகிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg