Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் குறித்து பிரதமர் மேயுடன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பேச்சு

In
Updated: 08:59 GMT, Apr 27, 2017 | Published: 08:59 GMT, Apr 27, 2017 |
0 Comments
1260
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளோட் ஜங்கர் மற்றும் பிரெக்ஸிற் தலைமை பேச்சாளர் மைக்கல் பார்னியர் ஆகியோர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ சந்தித்து பிரெக்சிற் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத் தலைவருக்கான பிரதமரின் அழைப்பிற்கிணங்க குறித்த சந்திப்பு லண்டனில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் முன்கூட்டிய பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்த பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான செயன்முறைகள் குறித்து விவாதிப்பதற்கு ஐரோப்பிய ஆணையத் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைய பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரெக்சிற் குறித்த தமது நிலைப்பாடுகளை ஒப்புக்கொள்ளும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் பிரஸ்சல்ஸில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg