Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரசாயன தாக்குதலின் பின்னணியில் சிரிய ஜனாதிபதி!

In உலகம்
Updated: 10:29 GMT, Apr 27, 2017 | Published: 09:59 GMT, Apr 27, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Anojkiyan
tox1-720x450

சிரியாவில் அண்மையில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலின் பின்னணியில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் காணப்படுவதாக பிரான்ஸ் பாரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன வாயுத் தாக்குதலின் மாதிரிகள், சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கலவையுடன் ஒத்துப்போவதையடுத்து இந்த குற்றச்சாட்டை பிரான்ஸ் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஆறு பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ், சிரியாவை கடுமையாக கண்டித்தும் உள்ளது.

இதுகுறித்து பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி அய்ரல்ட் கூறுகையில், “சிரிய இரசாயன வாயுத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இராசாயனக் கலவைகள் சிரிய நாட்டில் உள்ள ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தக் குற்றச் செயல்களின் பின்னால் உள்ளவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என கூறினார்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் கடந்த 4ஆம் திகதி நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg