Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு: நாடுகடத்த திட்டம்

In கனடா
Updated: 11:20 GMT, Apr 27, 2017 | Published: 10:33 GMT, Apr 27, 2017 |
0 Comments
1154
This post was written by : Surenth

கனடாவில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை இலங்கைக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டு பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து ஜோதிடர் பாஸ்கர் முனியப்பாவை நாடுகடத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 35 வயதையுடைய பாஸ்கர் முனியப்பா சக்தி வாய்ந்த ஆன்மீகம் மற்றும் மாய மந்திர வித்தை முதலானவற்றால் காதல் குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பததாகக் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், கணவனை பிரிந்த பெண் ஒருவர் தன்னை கணவருடன் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் மந்திரவாதியிடம் உதவிக்கு சென்றுள்ளார்.

மந்திரவாதி இந்த குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும் 21 ஆண்டுகளுக்கு திருமண பாதுகாப்பு கிடைக்கும் எனவும் குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணின் உடலில் 20 நிமிடங்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்துள்ளார். இந்நிலையில் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து குறித்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குறித்த பெண் தொடர்ச்சியாக அந்த மந்திரவாதியிடம் சென்றுள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளை பயன்படுத்திய மந்திரவாதி கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதேபோன்று மேலும் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக குற்ற அறிக்கையை வாசித்த வழக்கறிஞர் Paul Zambonini நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றச் செயல்களை முனியப்பா மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்ட தை அடுத்து அவரை நாடுகடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg