Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தாளும் அணுகுமுறையை பிரித்தானியா கையாளாது: அமைச்சர்

In
Published: 09:54 GMT, Apr 27, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Risha

நடைபெறவுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் பிரித்தாளும் அணுகுமுறையை பிரித்தானியா கையாளாது என பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்தி மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரெக்சிற் பேச்சுவார்த்தை இடம்பெறும் இரண்டு வருட காலத்திற்குள் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் எவ்வித எதிர்பார்ப்புகளையும் பிரித்தானியா கொண்டிராது.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுகையில் சுமூகமான மற்றும் நிலையான மாற்றத்தை உறுதிப்படுத்தவே பிரித்தானியா முயற்சித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் புத்திசாலித்தனமான அணுகுமுறை ஊடாக எதிர்வரும் ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg