Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

In இலங்கை
Updated: 10:37 GMT, Apr 27, 2017 | Published: 10:03 GMT, Apr 27, 2017 |
0 Comments
1129
This post was written by : Vithushagan

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்,பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மத்திய மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கழிவகற்றலில் பெரும் சவாலையும் சூழலுக்கு பாரிய தீங்கையும் ஏற்படுத்தவல்ல பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பாடசாலைகளிலும் அரச நிறுவனங்களிலும் பயன்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டுமென அண்மையில் யாழ். மாநகர சபையினால் அறிவுறுத்தப்பட்டதோடு, யாழில் உடன் அமுலுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg