Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘எமக்கான உதவிகளை அரசியல்வாதிகளே அனுபவிக்கின்றனர்’ – பன்னங்கண்டி மக்கள்

In இலங்கை
Updated: 13:00 GMT, Apr 27, 2017 | Published: 11:23 GMT, Apr 27, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Anojkiyan
pan

வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் தமக்கான உதவிகளை அரசியல்வாதிகளே அனுபவிப்பதாக காணி உறுதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமக்கான காணி உறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி 37வது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுள் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் காலத்தில் இங்குவரும் அரசியல்வாதிகள் எங்களிடம் உதவி செய்வதாக கூறி, வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் எம்மை புறக்கணிக்கின்றனர்.

அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் தமது இல்லங்களுக்கு வந்து எங்களது நிலையை அறிந்தாலே அவர்களுக்கு எமது நிலை புரியும். உதவி செய்வதாக கூறி இதுவரை ஒரு உதவியும் செய்யவில்லை. எங்களுக்கு வரும் உதவிகளை அரசியல்வாதிகளே அனுபவிக்கின்றனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg