Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி விளையாட்டாக கூறியதை வினயமாக்கிய ராஜித!

In இலங்கை
Updated: 11:02 GMT, Apr 27, 2017 | Published: 10:58 GMT, Apr 27, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Varshini
rajitha and maitri

‘சரத் பொன்சேகாவிற்கு இராணுவ உயர்பதவி’ என்று ஜனாதிபதி விளையாட்டிற்கு கூறியதை, அமைச்சர் ராஜித சேனாரத்ன விபரீதமாக எடுத்துக் கொண்டுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிற்கு இராணுவத்தில் உயர் பதவி ஒன்றை வழங்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்றைய ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே, எஸ்.பி.திஸாநாயக்க மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”ஜனாதிபதி எவ்வாறான நோக்கத்தில் அதனைத் தெரிவித்தார் என்று எனக்கு தெரியாது. அதனை அவர் நகைச்சுவையாக கூறினார் என்றே நான் நினைக்கின்றேன். அமைச்சரவையின் போது, சரத் பொன்சேகாவை பார்த்த ஜனாதிபதி ‘மீண்டும் இராணுவத் தளபதியாவதற்கு ஆசையில்லையா?’ என்று கேட்டார். அந்த இடத்தில் வேறு ஏதையும் ஜனாதிபதி பெரிதாக கூறவில்லை.

ஆனால் அமைச்சர் ராஜித சேனாரத்ன இது குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். நான் அதனை பொருட்படுத்தவில்லை” என்றார்.

இதன்போது, ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவற்கும், அவசர நிலைமைகளை சமாளிப்பதற்கும் சரத் பொன்சேக்கா கூட்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த எஸ்.பி,

”அவசர நிலைமைகளின் போது, நாமும் முன்னின்று செயற்படுவோம். அதற்கு விசேடமாக எதுவும் தேவையில்லை. அவசர நிலைமை ஏற்பட்டால் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தில் ஏதேனும் அதிகாரத்தை வழங்கி, இராணுவ செயற்பாடுகளை துரிதப்படுத்துவற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அது வேறுவிதமான ஒரு செயற்பாடாகும்.

ஆனால் அதனையும் தாண்டிய ஒரு செயற்பாட்டினை எங்களால் நிறைவேற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. இது ஒரு ஜனநாயகமான நாடாகும். சமாதானம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்று கதைத்து வந்த நாடாகும்.

பொன்சேகாவிடம் ஜனாதிபதி இராணுவத் தளபதியாவதற்கு விருப்பமா என்று கேட்டதனால், பாரிய ஒரு திட்டம் இருக்கிறது என்று சுதந்திரக் கட்சியினராகிய நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் சிலர் பயந்துபோயுள்ளனர். அது குறித்து அவர்களிடம்தான் கேட்கவேண்டும்” என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg