Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனநாயகத்தை பாதுகாக்க தனக்கு வாக்களிக்குமாறு மக்ரோன் கோரிக்கை

In ஐரோப்பா
Updated: 11:29 GMT, Apr 27, 2017 | Published: 10:56 GMT, Apr 27, 2017 |
0 Comments
1129
This post was written by : Risha
macron

பிரான்ஸ் மக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்புவார்களாயின், அவர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என தாராள மத்தியவாத கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிடும் தீவிர வலதுசாரி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக நேற்று (புதன்கிழமை) பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரசாரத்தின்போது தீவிர வலதுசாரி கட்சியின் வேட்பாளர் லி பென்னை கடுமையாக சாடிய அவர், குடியரசின் சட்டங்களை மதிக்கத் தெரியாத சமூகத்திலிருந்தே லி பென் வந்துள்ளார். எனவே சட்டங்களுக்கு மதிப்பளித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, “முதற்கட்ட வாக்கெடுப்பில் நாம் வெற்றிபெற்றுள்ள போதிலும், தேர்தலின் முழுமையாக இன்னும் வெற்றிபெறவில்லை. எனவே நாம் கவனமாக செயற்படுவது அவசியமாகும்” என மக்ரோனின் ஆதரவாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg