Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவின் கோரிக்கையை மறுப்பது கடினம்: பொரிஸ்

In
Updated: 12:06 GMT, Apr 27, 2017 | Published: 11:35 GMT, Apr 27, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Risha
boris

சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்கா கோரும் பட்சத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்தல் கடினமாகும் என வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலில் 80இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்ட அமெரிக்கா, அதன் எதிரொலியாக சிரிய இராணுவத்தளமொன்றின் மீது ஏவுகணை தாக்குதலொன்றையும் நடத்தியிருந்தது.

இந்நிலையில் சிரியாவிற்கு எதிராக மற்றுமொரு இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகும் பட்சத்தில், அதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பை கோரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிரியா மீதான இராணுவ நடவடிக்கையில் பிரித்தானியா ஈடுபடப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபலோன் ஏற்கனவே ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg