Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்படவுள்ள தராகி சிவராமின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்

In இலங்கை
Published: 11:42 GMT, Apr 27, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Anojkiyan
thae

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12ஆவது ஆண்டு நினைவேந்தர் நிகழ்வு, இம் முறை கிளிநொச்சி நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி, பிற்பகல் 3 மணிக்கு ஏ-9 வீதி கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடாக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் எனப் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் துணிச்சலுடனும், ஊடற அறத்துடனும், செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், யாழ்.ஊடக அமையம் இவ்வாண்டு முதல் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கும் தராகி சிவராம் ஞாபகாத்த விருது, மறைந்த கேலிச் சித்திர கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு, கிழக்கில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருது வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு, இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg