Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்!

In
Updated: 12:36 GMT, Apr 27, 2017 | Published: 12:01 GMT, Apr 27, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Risha
looo

உலக வர்த்தக மையக் கட்டடத்தின் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட செப்டெம்பர் 11 தாக்குதலை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைநிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த லண்டன் இளைஞன், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி லண்டன் ஹைட் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர் எல்டன் ஜோனின் இசை நிகழ்ச்சியின் போது,  19 வயதான ஹரூன் சையட் என்ற இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.

இந்நிலையில், குறித்த இளைஞன் தாக்குதல் தொடர்பில் இணையத்தில் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தமை பிரித்தானிய அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, தாக்குதலுக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சித்ததுடன், லண்டனில் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்கள் தொடர்பிலம் ஆராய்ந்துள்ளார்.

இந்நிலையில், குற்றத்திற்கான நன்னடத்தை சோதனை அறிக்கை மற்றும் உளவியல் அறிக்கை என்பன வெளியானவுடன் எதிர்வரும் ஜூன் மாதம் அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg