Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாரிய கிரேன் மீது ஏறிய பெண் ஒருவரை ரொறொன்ரோ தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்

In கனடா
Updated: 12:38 GMT, Apr 27, 2017 | Published: 12:24 GMT, Apr 27, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Surenth
Torrent 10

கனடா ரொறொன்ரோ பகுதியில் பாரிய கிரேன் மீது ஏறிய பெண் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறொன்ரோ பகுதி வீதியின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிரேன் மீது பெண் ஒருவர் ஏறியிருப்பதாக அந்த பகுதி தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குறித்த பெண்ணை கிரேன் மீது ஏறி மீட்டுள்ளனர். இதையடுத்து அந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கிரேன் மீது அந்த பெண் ஏறியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது போன்ற சம்பவம் ஒன்றை இதுவரைக்கும் தான் பார்த்தது இல்லை எனவும் குறித்த பெண் அச்சம் இல்லாமல் அந்த கிரேன் மீது அமர்ந்து இருந்ததாகவும் தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg