Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 15:36 GMT, Apr 27, 2017 | Published: 15:36 GMT, Apr 27, 2017 |
0 Comments
1251
This post was written by : Sivaguru Siva

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகமான வெஸ்ற்மின்ஸ்ரருக்கு அருகாமையிலுள்ள வைற் ஹோல் பகுதியில் இரண்டு கத்திகளுடன் நடமாடிய ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கபட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லையென ஸ்கொட்லான்யாட் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 20 வயதையுடையவர் என்றும் தெரியவருகிறது.

கடந்தமாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் பயங்கரவாதத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

8575659

ஜேர்மனி பேர்லின் குறூஸ்பேர்க்கில் உள்ள வைத்தியசாலையொன்றில் இன்று காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எனினும் இந்தச் சம்பவத்துக்காக காரணங்களை காவற்துறை வெளியிடாதபோதிலும் அந்தப்பகுதி காவற்துறையினரால் சுற்றி வளைக்கபட்டுள்ளதாக தெரியவருகிறது.

_95811048_039195428-1

ரஸ்யாவின் உளவுபார்க்கும் கடற்கலமொன்று துருக்கிக்கு அருகே மூழ்கியுள்ளது. சரக்குக்கடற்கலமொன்றுடன் மேற்படி கலம் மோதியதையடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடும் பனிமூட்டத்தின் காரணமாக மேற்படி கலங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதனையடுத்து ரஸ்ய கலத்திலிருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ரஸ்ய கடற்கலங்கள் கருங்கடற்பிராந்தியத்தில் இருந்து போஸ்போரஸ் நீரிணை ஊடாக மத்தியதரைக்கடலுக்கு செல்லும்போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

_95806807_merkelindexokreut

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா கொண்டிருக்கக்கூடிய எதிர்கால உறவுகள் குறித்து பிரித்தானிய மக்களில் ஒருசாரார் மாயத்தோற்றத்தை கொண்டிருப்பதாக ஜேர்மன் அதிபர் அங்கலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான எதிர்கால உடன்பாடு பிரெக்ஸிற் பேச்சுக்களின வெற்றியைப்பொறுத்தே தீர்மானிக்கபடுமெனவும் மெர்க்கல் சுட்டிட்காட்டியுள்ளார்

ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

_95805738_mediaitem95805736

இஸ்ரேல் ஏவிய ஏவுகணையொன்று சிரியாவின் டமஸ்கஸ் விமான நிலையத்துக்கு அருகில் வீழ்ந்து வெடித்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் எரிபொருள் சேமிப்புதாங்கி ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்களஞ்சியம் ஒன்று இருந்ததாகவும் தெரியவருகிறது.

1032898156

முழுமையான உள்நாட்டு தயாரிப்பாக நேற்று பகிரங்கப்பட்ட சீனாவின் புதிய விமானந்தாங்கிக்கப்பலானது தென் சீனக் கடல்பிராந்தியத்தில் சீனா தன்னை ஒரு சக்தி வாய்ந்த நாடாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் ஒரு புதிய ஆதாரமென அமெரிக்க பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ரேண்ட் குறிப்பிட்டுள்ளது
கடந்த 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட சுமார் 50 ஆயிரம் தொன்; எடை கொண்ட இந்த விமானந்தாங்கிக்கப்பலானது போர் தளவாடங்கள் இணைக்கபட்ட பின்னர் எதிர்வரும் 2020- ம் ஆண்டு சீனாவின் கப்பற்படையுடன் இணைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg