Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களது போராட்டங்களை முடக்குவதற்கு சதி: மஹிந்த குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 03:19 GMT, Apr 28, 2017 | Published: 03:19 GMT, Apr 28, 2017 |
0 Comments
1433
This post was written by : Varshini

மக்களது போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் பழிவாங்கல் மேலோங்கியுள்ளதென்றும் மக்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே சரத் பொன்சேகாவுக்கு பதவி வழங்கப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ஜனக்க பண்டார தென்னகோன் நீக்கப்பட்டமை முட்டாள்தனமான விடயமென்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டளையின் பிரகாரமே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg