Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லண்டனில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை: பெண் மீது துப்பாக்கி சூடு- நால்வர் கைது

In
Published: 03:59 GMT, Apr 28, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Risha

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது லண்டன் பொலிஸாரால் பெண்ணொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் மற்றும் கென்ட் ஆகிய பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு சதித்திட்டம் தீட்டி வந்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், பிரதமர் அலுவலகத்தின் அருகே நேற்று ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட நபருக்கும், குறித்த நால்வர் கைது செய்யப்பட்டமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான பெண் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஐவரும் உளவுத்துறையின் தலைமையிலான தீவிரவாத எதிர்ப்பு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் சந்தேகநபர்களின் பெயர் விபரங்கள் வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg