Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ப்ளே ஓஃப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது குஜராத் அணி: பெங்களூர் அணி பரிதாபம்

In கிாிக்கட்
Updated: 05:38 GMT, Apr 28, 2017 | Published: 04:07 GMT, Apr 28, 2017 |
0 Comments
1809
This post was written by : Anojkiyan
pla

ஐ.பி.எல் தொடரின் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்கிடையிலான 31வது லீக் போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் வெற்றியின் மூலம் ப்ளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி கடும் நெருக்கடிக்கு மத்தியில் 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக நெகி 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் அணி, 13.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இதில் அணியின் அதிபட்ச ஓட்டமாக பின்ச் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பத்ரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குஜராத் அணி சார்பில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டை  தெரிவுசெய்யப்பட்டார்.

பலம்பொருந்திய வீரர்கள் இருந்தும் மோசமான செயற்பாட்டின் காரணமாக நடப்பு தொடரில், ப்ளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெங்களூர் இழந்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg