Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் ஆசியோடு நல்லது நடக்கும்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 10:19 GMT, Apr 28, 2017 | Published: 04:57 GMT, Apr 28, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Surenth
Jayakumar

ஜெயலலிதாவின் ஆசியோடு எல்லாம் நன்றாக நடக்கும் எனவும் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியும் அ.தி.மு.க. அம்மா அணியும் விரைவில் ஒன்று சேரும் எனவும் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வடசென்னை, தென்சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் அ.தி.மு.க. அம்மா அணி தலைமை கழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழக நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றுமைக்காக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் இதற்கு சிரேஸ்ட அமைச்சர்களின் வழிகாட்டல் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்படுவதற்கு இடமில்லை என்றும் இரண்டு அணிகளும் ஒற்றுமையாக இருப்பதை தான் தொண்டர்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரண்டு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg