Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை

In இலங்கை
Updated: 05:30 GMT, Apr 28, 2017 | Published: 04:42 GMT, Apr 28, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sl n iran

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹூசைன் தெகான் (Hossein Dehghan) மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமார ஆகியோருக்கு இடையில் மொஸ்கோவில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் மொஸ்கோவில் தற்போது நடைபெற்று வரும் 6ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள குறித்த பிரதிநிதிகள், குறித்த மாநாட்டிற்கு மேலதிகமாக இச் சந்திப்பில் நேற்று (வியாழக்கிழமை) ஈடுபட்டனா்.

உலக நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதானமாக கொண்டு நடைபெறும் இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg