Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: எட்டு பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 05:06 GMT, Apr 28, 2017 |
0 Comments
1288
icon_com
This post was written by : Risha

சிாியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் மாகாணத்தில் இரு வைத்தியசாலைகள் மீது ஜெட் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் சுமார் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குண்டு தாக்குதல்களானது ரஷ்யா அல்லது சிரிய படையினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இட்லிப் மாகாணத்தின் தெற்கு பகுதியிலுள்ள டீர் அல் ஷார்கி (Deir al Sharqi) கிராமத்திலுள்ள வைத்தியசாலையை இலக்குவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் சுமார் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்ததாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, மார் ஸிடா (Maar Zita) கிராமத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலில் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் குறிப்பிட்டனர்.

வடமேற்கு சிரியாவில் மருத்துவ நிலையங்களை இலக்குவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், மருத்துவமனைகள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

இதேவேளை, பஷர் அல்-அசாதிற்கு ஆதரவாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சிரிய மோதலில் இணைந்துக் கொண்டுள்ள ரஷ்யாவும் பொது உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கவில்லை என தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg