Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் : மோடி

In இந்தியா
Updated: 10:19 GMT, Apr 28, 2017 | Published: 06:15 GMT, Apr 28, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Surenth

ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பிக்கவிட  மாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இமாச்சலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா நேர்மையான சகாப்தத்துக்கு தயாராகி வருவதாகவும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது எனவவும் அவர் கூறினார்.

மேலும், பாதணி அணிந்தவர் முதல் அனைவரும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அதற்காகவே கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg