Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலி முகத்திடல் கூட்டத்தில் சு.க. உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்: எஸ்.பி.

In இலங்கை
Published: 05:30 GMT, Apr 28, 2017 |
0 Comments
1217
This post was written by : Varshini

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வரலாற்றில் அதிகமானோர் கலந்துகொள்ளும் மே தினக் கூட்டமாக சு.க.வின் மே தினக் கூட்டம் நடைபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு, மே தினக் கூட்டம் நடைபெறும் கண்டி மாவட்டத்தின் மற்றும் மேடை அலங்காரத்திற்காக பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட மாட்டாதெனவும், கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் தொண்டர்களின் உதவியுடன் மைதானம் சுத்தப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சு.க.வின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்த போதிலும், அது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg