Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டெல்லி அணிக்கு வலுசேர்க்க களமிறங்குகிறார் சாமுவேல்ஸ்

In கிாிக்கட்
Published: 05:55 GMT, Apr 28, 2017 |
0 Comments
1253
icon_com
This post was written by : Anojkiyan
marlon-1493277008-800

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியினை வலுப்படுத்த, மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான மர்லன் சாமுவேல்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அணியில் இணைக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளரான குயின்டன் டி கொக், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதையடுத்து சாமுவேல்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் இடம் பிடித்த 36 வயதான சாமுவேல்ஸ்க்கு அடிப்படை விலையாக இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத நிலையில், தற்போது டெல்லி அணி அவரை வாங்கியுள்ளது.

அவர் இன்று நடைபெறும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில், இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற சாமுவேல்ஸின் வருகை, புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள டெல்லி அணியை வலுப்படுத்துமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg