Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆயுத கடத்தலை தடுக்கவே டமஸ்கஸில் தாக்குதல் நடத்தப்பட்டது- இஸ்ரேல்

In உலகம்
Published: 06:59 GMT, Apr 28, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Risha

சிரிய தலைநகர் டமஸ்கஸின் விமான நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள லெபனான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆயுத கிடங்கொன்றை இலக்குவைத்து இஸ்ரேல் விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

ஈரானுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான ஆயுத கடத்தலை தடுக்கும் தமது கொள்கையின் ஒரு அங்கமாகவே நேற்றைய (வியாழக்கிழமை) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அந்தவகையில் தலைநகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள விமான நிலைய வீதியில் ஐந்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் இராணுவ பகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் பிராந்தியத்திலிருந்து ஏவப்பட்ட ரொக்கெட்டுகளானது விமான நிலையத்தின் தென்மேற்கு பகுதியில் வெடித்து சிறதியுள்ளன. குறித்த தாக்குதலில் எரிபொருள் தாங்கி மற்றும் ஆயுத கிடங்கு என்பன சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் அதன் முக்கிய ஆதரவாளரான ஈரானிற்கும் எதிராக இஸ்ரேல் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg