Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மசிடோனிய நாடாளுமன்றத்திற்குள் கலவரம்: 9 பேர் காயம்

In ஐரோப்பா
Updated: 07:39 GMT, Apr 28, 2017 | Published: 07:39 GMT, Apr 28, 2017 |
0 Comments
1240
This post was written by : Risha

மசிடோனிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அல்பேனியர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு ஆதரவாக சமூக ஜனநாயக் கட்சியினரும் அல்பேனிய இனத்தவர்களும் வாக்களித்த நிலையில், நாடாளுமன்றத்தில் கலவரம் வெடித்துள்ளது.

தமது கட்சியினர் தலத் சஃபேரியை நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்வதாக சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்ததை அடுத்தே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அல்பேனிய சட்டமன்ற உறுப்பினர் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்குள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் முகக் கவசங்களை அணிந்தவாறு ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg