Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பாகுபலி 2’ வெளியீட்டில் ஏற்பட்டிருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது

In சினிமா
Updated: 08:20 GMT, Apr 28, 2017 | Published: 08:20 GMT, Apr 28, 2017 |
0 Comments
1143
This post was written by : Rajinthan

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் ‘பாகுபலி 2’. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் இன்று (ஏப்ரல் 28) வெளியாகியது.

தமிழகத்தில் காலை காட்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 4:45 மணிக் காட்சி மற்றும் 8 மணிக் காட்சிக்கு வந்த ரசிகர்கள் அனைவருமே பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். ‘பாகுபலி 2’ படத்தின் தயாரிப்பாளர் ஷோபுவுக்கு, தமிழக உரிமையைக் கைப்பற்றியிருக்கும் ராஜராஜனுக்கு இடையே பணப்பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கான பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.

இப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, அனைத்து திரையரங்குகளுக்கும் QUBE KEY கொடுக்கப்படவுள்ளது. தற்போது தமிழகத்தில் ‘பாகுபலி 2’ வெளியாகவுள்ளது.

ஆனால், இதில் மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்பேச்சுவார்த்தையில் தினசரி முறையில் QUBE KEY கொடுக்க படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மற்ற படங்களுக்கு வாரம் ஒரு முறை QUBE KEY கொடுக்கும் முறைவுள்ளது.

ஆந்திராவில் அதிகாலை காட்சிகள் தொடங்கப்பட்டு, அனைவருமே படம் பற்றிய கருத்துகளை தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்து வருகிறார். அனைவருமே இயக்குநர் ராஜமெளலிக்கு பெரும் பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg