Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விபத்திற்குள்ளான ரஷ்ய கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பணியாளர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு

In ஐரோப்பா
Published: 08:02 GMT, Apr 28, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Risha

துருக்கி கரையோரப் பகுதியில் விபத்திற்குள்ளான ரஷ்ய கடற்படை உளவுத்துறை கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 78 பணியாளர்களும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் பணியாளர்கள் அனைவரும் இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து தனியார் ரஷ்ய விமானமொன்றின் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மீட்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் சிறந்த உடல் நலத்துடன் பாதுகாப்பாக இருப்பதாக துருக்கி போக்குவரத்து அமைச்சர் அஹமட் ஆர்ஸ்லன் தெரிவித்துள்ளார்.

மேற்படி ரஷ்ய கடற்படை உளவுத்துறை கப்பலானது, துருக்கி கரையோரப் பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற படகொன்றுடன் மோதி நேற்று விபத்திற்குள்ளாகியது. கடுமையான பனிமூட்டம் காரணமாகவே குறித்த விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg