Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அதிபரை இடமாற்றுமாறு கோரி செட்டிகுளம் மாணவர்கள் தொடர் போராட்டம்

In இலங்கை
Published: 08:21 GMT, Apr 28, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வவுனியா – செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரை இடமாற்றுமாறு கோரி அப் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர், இதற்கு முன்னர் கடமையாற்றிய பாடசாலைகளில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது நியமனத்தை இரத்து செய்து பிறிதொரு அதிபரை நியமிக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிபரை இடமாற்றுவதற்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிப்போம் என பெற்றோர்களும் பழைய மாணவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவான பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

vavuniya students protest (1) vavuniya students protest (2) vavuniya students protest (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg