Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு கோர்பின் ஓர் அச்சுறுத்தல்: பொரிஸ் ஜோன்சன்

In
Updated: 11:44 GMT, Apr 28, 2017 | Published: 09:36 GMT, Apr 28, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Sylviya
11

பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை சாதாரணமாக கருத வேண்டாம் எனவும் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவே அவரை நோக்க வேண்டும் எனவும் பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்த பிரசாரத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஈடுபட்ட போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பிரசாரத்தின் போது மேலும் கருத்து தெரிவித்த பொரிஸ், ஜூன் மாதத் தேர்தலின் பின்னர் பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மேயிற்கு பதிலாக கோர்பின் தெரிவு செய்யப்படின் அது பிரித்தானியாவை அழிவுப் பாதையிலேயே கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளித்திருந்த கோர்பின்,  தனிப்பட்ட காரணங்களினால் பொரிஸ் மேற்குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் எனவும் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடத்தப்படுவதே இந்த காலகட்டத்தில் சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோர்பின் தன்னைத் தானே வெகு உயர்வாக கருதிக்கொள்பவர் என பொரிஸ் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த கோர்பின், பொதுத் தேர்தல் தொடர்பில் தன் மீது உள்ள தனிப்பட்ட வெறுப்புக்கள் காரணமாகவே பொரிஸ் அவ்வாறு தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg