Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுஸ்மா சுவராஜை சந்தித்தார் சைப்ரஸ் ஜனாதிபதி

In இந்தியா
Published: 09:57 GMT, Apr 28, 2017 |
0 Comments
1080
icon_com
This post was written by : Surenth
Cyprus

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு வந்துள்ள சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் அனஸ்டசிடேஸ், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இச் சந்திப்பில், இரு நாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள சைப்ரஸ் ஜனாதிபதி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான நேரடி முதலீட்டுடன் தொடர்புடைய சைப்ரஸ், இந்தியாவில் முதலீடு செய்துள்ள எட்டாவது மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பொருளாதார உறவு காணப்படும் அதேவேளை, இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் சைப்ரஸ் ஜனாதிபதியின் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg