Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சி

In வணிகம்
Updated: 10:09 GMT, Apr 28, 2017 | Published: 10:09 GMT, Apr 28, 2017 |
0 Comments
1150
This post was written by : Surenth
Exibition

2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களின் கண்காட்சி “FACETS” சர்வதேச பங்களிப்புடன் நடைபெற உள்ளது.

இலங்கை இரத்தின கற்கள் மற்றும் ஆபரண சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதன்போது, இலங்கையின் மிகப்பெறுமதியான வளங்களில் அதி உயர்ந்தவற்றை “FACETS” கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

மேலும், அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் பெறுமதி மிக்க இரத்தின கற்கள் முதல் ஆபரணங்கள் வரை சிறந்த வர்த்தக நாமங்களில் கைக்கடிகாரங்கள், நவநாகரிக ஆபரணங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த வருடம் இடம்பெறும் கண்காட்சியின் போது, உலகம் முழுவதும் உள்ள பெருந்தொகையான ஆர்வமுடையவர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கண்காட்சியில் அதிக அளவான விற்பனை கூடங்கள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg