Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுச் சேவையினர் விழிப்பாக உள்ளனர்: தெரேசா மே

In
Updated: 10:53 GMT, Apr 28, 2017 | Published: 10:05 GMT, Apr 28, 2017 |
0 Comments
1339
This post was written by : Sylviya
12

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் கத்திகள் நிறைந்த பையை கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம், பிரித்தானிய பொலிஸார் மற்றும் புலனாய்வுச் சேவையினர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எந்நேரமும் விழிப்பாக உள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

செஸ்ட்டர்ஃபீல்டில் (Chesterfield) உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்டு அங்கு உரையாற்றிய போதே, தெரேசா மே  மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போது, “எமது பொலிஸார், பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் எந்நேரமும் விழிப்பாக உள்ளனர் என்று தான் கூறவேண்டும். எம்மை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனும் எண்ணமே அவர்களிடம் மேலோங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு படையினர் பிரித்தானிய நாடாளுமன்றம் அமையப்பெற்றுள்ள பாதையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கத்திகள் நிறைந்த பையொன்றை கொண்டு சென்ற நபர் நேற்று கைது  செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயது மதிக்கத்தக்கவர் எனவும் அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் எனவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg