Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா ஓபனில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் முர்ரே

In டெனிஸ்
Published: 10:11 GMT, Apr 28, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Varshini

ஸ்பெய்னில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான பிரித்தானியாவின் என்டி முர்ரே வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப் போட்டியில், இவர் ஸ்பெய்ன் வீரர் பெலீசியானோ லுபெஸ்யை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்றைய போட்டியில் பிரித்தானியாவின் என்டி முர்ரே மற்றும் ஸ்பெய்னின் பெலீசியானோ லுபெஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய என்டி முர்ரே 6:4, 6:4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

வெற்றியின் பின்னர் கருத்து தெரிவித்த என்டி முர்ரே “இந்த பயணம் கடினமானது. முதல் செட்டில் இறுதி தருணத்தில் நான் தடுமாறிவிட்டேன். ஆனாலும் செட்டை கைப்பற்றினேன்.

எதிர் போட்டியாளரின் சவாலை எதிர்கொண்டு திறமையாக செயற்பட்டேன். எனது சேர்விஸ்களின் போது, எதிர் போட்டியாளருக்கு 6 அல்லது 7 பிரேக் பொய்ன்ட்ஸ் (Break points) வாய்ப்புக்கள் கிடைத்தன

அதேபோல் எனக்கும் 10 வாய்ப்புக்கள் கிடைத்தன. இருவருக்கும் பல வாய்ப்புக்கள் கிடைத்த நிலையில், நான் வெற்றி பெற்றேன்” என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg