Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொமர்ஷல் வங்கியின் சுயாதீன நிறைவேற்று பணிப்பாளராக கே.ஸ்ரீபவன் நியமனம்

In வணிகம்
Published: 11:16 GMT, Apr 28, 2017 |
0 Comments
1281
This post was written by : Surenth
Sripavan

ஓய்வு பெற்ற பிரதமநீதியரசர் கே.ஸ்ரீபவன் இலங்கையின் முன்னணி வர்த்தக நிதி நிறுவனமான கொமர்ஷல் வங்கியின் சுயாதீன நிறைவேற்று பணிப்பாளராக கடந்த 26ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பிரதமநீதியரசராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையின் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் சட்ட கல்வி நிறுவனத்தின் இணைத் தலைவராகவும், இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக பதவி வகித்திருந்த அதேவேளை, இவர் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில்  2 ஆவது தமிழ் நீதியரசர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg