Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளின் தற்கொலை விகவாரத்தில் அ.தி.மு.க.-விற்கு தி.மு.க. அழுத்தம்

In இந்தியா
Updated: 10:47 GMT, Apr 28, 2017 | Published: 10:46 GMT, Apr 28, 2017 |
0 Comments
1304
This post was written by : Risha

தமிழகத்தில் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரின் துயரை போக்கும் வகையில் உடனடியாக நிவாரண நிதியை வழங்க வேண்டும் என அ.தி.மு.க. அரசாங்கத்தை தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹிந்தி மொழியை பரப்ப மத்திய அரசு எடுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்டந்தோறும் கருத்தரங்குகளை நடத்துதல், தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குடிநீர் பஞ்சத்தைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற நிலையில், அதில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெறுவது தொடர்பிலும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg