Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றத் தயார்! – ஆனந்த சங்கரி

In இலங்கை
Updated: 10:57 GMT, Apr 28, 2017 | Published: 10:55 GMT, Apr 28, 2017 |
0 Comments
1438
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sangaree

தமிழ் மக்கள் ஒற்றுமையாக, ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகியின் ஆசையை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கின்றதென அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தாம் எந்த கட்சியையும் வெறுக்கவில்லை எனத் தெரிவித்த சங்கரி, தமிழர்களின் ஒற்றுமைக்காக இணைந்து செயற்பட தயார் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தமது சின்னத்தில் போட்டியிடும் என்றும் மேலும் தெரிவித்தார்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டாது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இணைந்து செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஆனந்தசங்கரி, பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டுமென குறிப்பிட்டார்.

இதேவேளை, யுத்தம் முடிந்த பின்னரும் வடக்கில் பெருமளவான இராணுவ முகாம்களை இயக்கவேண்டிய அவசியம் கிடையாதென சுட்டிக்காட்டிய ஆனந்த சங்கரி, அவசியமாயின் ஆரம்பத்தில் இருந்த ஓரிரு முகாம்களில் மாத்திரம் இராணுவம் இருக்க முடியும் என்றும் ஏனையவற்றை மூடலாம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg