Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வடக்கு நீலங்களின் சமர்’ கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

In இலங்கை
Updated: 11:22 GMT, Apr 28, 2017 | Published: 11:20 GMT, Apr 28, 2017 |
0 Comments
1469
This post was written by : Varshini

‘வடக்கு நீலங்களின் சமர்’ கிரிக்கட் சுற்றுப்போட்டி, கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்து கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் இரண்டு நாட்களுக்கு இத் தொடர் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு, விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

இதன்போது குடும்பங்கள், இனங்கள், சமூகங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் மற்றும் சண்டைகளை தடுப்பதற்கு விளையாட்டு ஒரு சிறந்த தெரிவென குறிப்பிட்ட அரசாங்க அதிபர், மாணவர்கள் மத்தியில் இவ்வாறான விளையாட்டுக்களை உட்புகுத்துவதன் மூலம் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, இன்று இரு பாடசாலைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நட்பு ரீதியான போட்டிகளை ஏனைய பாடசாலைகளும் முன்னெடுத்து, மாணவர்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் சிறந்த சமுதாயத்தினை வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு நீலங்களின் சமர் (5) வடக்கு நீலங்களின் சமர் (7) வடக்கு நீலங்களின் சமர் (6) வடக்கு நீலங்களின் சமர் (2) வடக்கு நீலங்களின் சமர் (1) வடக்கு நீலங்களின் சமர் (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg