Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரைச்சி பிரதேசசபை செயலாளருக்கு எதிராக சிற்றூழியர்கள் போராட்டம்!

In இலங்கை
Updated: 11:51 GMT, Apr 28, 2017 | Published: 11:49 GMT, Apr 28, 2017 |
0 Comments
1337
This post was written by : Ravivarman

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை சிற்றூழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கால வரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதேசசபை செயலாளரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, கரைச்சி பிரதேசசபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த எதிர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகளைத் திறனுடன் செய்து வந்தோம். அண்மையில் தற்போதைய கரைச்சி பிரதேச சபை செயலாளர் சாதியை அடிப்படையாக வைத்து எங்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக எதிர்த்த ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்தியுமிருக்கின்றார். இவரது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை எதிர்ப்பதுடன், அவரை வேலையிலிருந்து நீக்குமாறும் கோரியே இந்தப் போராட்டத்தினை நடத்துகின்றோம்.

இப்போராட்டத்தின் மூலம் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மன்னிப்புக் கோருகின்றோம். ஏனெனில் பிரதேச சபை செயலாளரின் தகாத வார்த்தைப் பிரயோகத்தினால் நாங்கள் அனைவரும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். 48 ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஒற்றுமையுடன் ஈடுபட்டிருக்கின்றோம். குறித்த செயலாளரை இடமாற்றம் செய்யும் வரையில் எமது போராட்டம் தொடரும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் மேலும் தெரிவித்தார்.

12520157 12520154

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg