Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணுவாயுத செயற்பாடுகளை மேன்மேலும் மேற்கொள்ளும் வகையில் வடகொரியாவை துண்டக் கூடாது

In ஐரோப்பா
Updated: 12:16 GMT, Apr 28, 2017 | Published: 12:15 GMT, Apr 28, 2017 |
0 Comments
2663
This post was written by : Sylviya

வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகளை மேன்மேலும் ஊக்குவிக்கத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஏனைய நாடுகள் ஈடுபடாதிருக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புடின் மற்றும் ஷின்சோ அபே ஆகியோருக்கு இடையில் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் அபே மற்றும் புடின் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளனர். அத்துடன் வடகொரியா தொடர்பில் ஆறு சர்வதேச தரப்புக்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் புடின் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg