Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேதினத்தை புரட்சிகர நாளாக்குவதற்கு அனைவரும் அணிதிரளுங்கள்: மார்க்சிச லெனினிச கட்சி

In இலங்கை
Updated: 16:20 GMT, Apr 28, 2017 | Published: 14:57 GMT, Apr 28, 2017 |
0 Comments
1286
This post was written by : Ravivarman

மேதினத்தை புரட்சிகர எழுச்சி நாளாக்குவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு மார்க்சிச லெனினிச கட்சியின் வன்னிமாவட்ட தலைவர் நி.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேதின நிகழ்வு தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பதற்கான ஊடகசந்திப்பு வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை)     இடம்பெற்றபோதே   இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நில மீட்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற மக்களின் நிலங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மேதின நாளான 01.05.2017 அன்று போராட்ட நாளாகவும், சமூக சமத்துவ நீதிக்காகவும், மேதினத்தை புரட்சிகர எழுச்சி நாளாக மாற்றுவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என பிரதீபன் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு புகையிரதக் காப்பாளர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜே.ரொஹான் ராஜ்குமார், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் எஸ்.டொன் பொஸ்கோ, வவுனியா மாவட்ட அழகர் சங்க பொருளாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமது ஆதரவினையும் தெரிவித்திருந்தனர்.

மார்க்சிச லெனினிச கட்சியினரால் நடத்தப்படவுள்ள மேதின ஊர்வலமானது 01.05.2017 ஆம் திகதி காலை 09.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக நகர சபையினை வந்தடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg