Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் ஐ.தே.க.வில் இணைவேன்: திஸ்ஸ

In இலங்கை
Published: 15:15 GMT, Apr 28, 2017 |
0 Comments
1421
This post was written by : Ravivarman
thissa

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து கொள்வேன் என ஐ.தே.க. வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றின் போதே இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும். நான் பாரம்பரிய ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளன். ஆனால் தற்போதுள்ள ஆதரவாளர்களை நினைத்து நான் வேதனைப்படுகின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சிக்காக எனது வாழ்க்கையின் அரைவாசியினை அர்ப்பணித்துள்ளேன். உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் கட்சியுடன் இணைவது தொடர்பில் தீர்மானித்துள்ளேன்” என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg