Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டெல்லி அணியை துவம்சம் செய்தது கொல்கத்தா அணி

In கிாிக்கட்
Published: 03:32 GMT, Apr 29, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Anojkiyan
tom

ஐ.பி.எல் தொடரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் அரங்கேறிய 32வது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சம்சன் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கோல்ட்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணித்தலைவர் கம்பீர் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் கம்பீர் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg