Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீண்டும் ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி

In கிாிக்கட்
Published: 04:10 GMT, Apr 29, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Anojkiyan
ras

ஐ.பி.எல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக தவான் 77 ஓட்டங்களையும், வில்லியம்சன் 54 ஓட்டங்களையும், வோர்னர் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனைதொடர்ந்து, 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களே பெற முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் அணி சார்பில் ஷோன் மார்ஷ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நெஹரா மற்றும் கவுல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் சிக்கனமான பந்து வீசிய ராஷித் கான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

ஏற்கனவே நடந்த 19வது லீக் போட்டியில், ஹைதராபாத் அணியிடம் பஞ்சாப் அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg