Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நாட்டில் தனிநபர் ஆட்சி நடக்கிறதா? – ஆராய வேண்டும் என்கிறது காங்கிரஸ்!

In இந்தியா
Updated: 07:46 GMT, Apr 29, 2017 | Published: 04:15 GMT, Apr 29, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Rajinthan
201704290633090287_PM-Narendra-Modi-is-deciding-everything-presidential-form_SECVPF

எல்லா முடிவையும் மோடியே எடுக்கிற  நிலையில், நம் நாட்டில் ஜனாதிபதி முறையிலான தனிநபர் ஆட்சியா நடக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளாா்.

பிரமா் நரேந்திர மோடியினால் மேற்கொள்ளப்படுகின்ற தீா்மானங்கள் தொடா்பில்  அதிருப்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதுதொடா்பில் கருத்து தெரிவிக்கும்போதே சசி தரூா் இதனை தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசில்  பா.ஜ.க. கூட்டணி தலைமையில்  ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.  கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, குஜராத் முதலமைச்சராக இருந்த  நரேந்திர மோடியை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது.

இந்த  தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. கடந்த மூன்று வருடங்களாக ஆட்சியமைத்துள்ளது. இதன்போது  கட்சியில் மோடியை மட்டுமே முன்னிறுத்தி வருவதாக அவ்வவ்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்  மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg