Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விவசாயிகள் எவரும் வறட்சியினால் தற்கொலை செய்யவில்லை : தமிழக அரசு

In இந்தியா
Updated: 07:44 GMT, Apr 29, 2017 | Published: 05:44 GMT, Apr 29, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Rajinthan
images

தமிழ்நாட்டில் விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு சார்பில் சென்னை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை மேல் நீதிமன்றத்தில்  கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 13-ம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையிலும், அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற சட்டத்தரணியாக  கோபால் சங்கர் நாராயண் நியமிக்கப்பட்டதுடன், தமிழக அரசு தரப்பில் யோகேஷ்கன்னா ஆயராகி இருந்ததுடன் அவர் தமிழக அரசு சார்பாக  70 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

அந்த அறிக்கையில் -

தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. இதுவரை 82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளதாக தமிழக அரசிடம் தகவல் உள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்து இருக்கின்றனர்.

உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, மாரடைப்பு போன்ற காரணங்களால் இந்த மரணங்கள் நேர்ந்துள்ளன. இதில் 30 பேர் தங்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள் என்றும் தெரியவருகிறது.

கடந்த 5 ஆண்டுகாலமாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. வறட்சி நிலை காணப்பட்டாலும் தமிழக அரசு எடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளால் தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது,  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக எம்.எம்.சந்தான கவுடர் அமர்வில் இடம்பெறாததால் இந்த மனுவை மே 2-ந் தேதி 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி தீபக்மிஸ்ரா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg